Categories
கிரிக்கெட் விளையாட்டு

உள்ளூர் மைதானங்களில் போட்டி … நடத்தாதது நல்லதுதான்… விராட் கோலி பேட்டி …!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இன்று நடைபெறும் ஐபில் தொடரின் , முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி, இன்று முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகள்  மும்பை ,சென்னை ,அகமதாபாத், பெங்களூர், கொல்கத்தா டெல்லி ஆகிய 6 நகரங்களில் உள்ள மைதானங்களில் ,இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கு முந்தைய ஐபிஎல் தொடரில், ஒவ்வொரு அணியும் அவர்களுடைய ,உள்ளூர் மைதானத்தில் 7 லீக் போட்டிகளில் மோதிக்கொள்ளும். இவ்வாறு அணிகள் அவர்களுக்கு, சொந்தமான உள்ளூர் மைதானங்களில் விளையாடுவதால் ,அந்த அணிக்கு சாதகமாக போட்டி அமையும். ஆனால் தற்போது இந்த சீசனில் ,எந்த ஒரு அணிக்கும் உள்ளூர் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படுவதில்லை.

தற்போது கொரோனா  வைரஸ் பரவலின் காரணமாக ,6 நகரங்களில் உள்ள மைதானங்களில் மட்டுமே, போட்டிகளை  நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதோடு இந்த ஐபிஎல் போட்டிகளை மைதானத்தில் கண்டுகளிக்க, ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் , மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள்  மோதிக் கொள்கின்றன.  இரு அணி வீரர்களும் , இந்த போட்டிக்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முதல் போட்டியில் பங்குபெறும் , ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலியிடம்  பேட்டி எடுக்கப்பட்டது .

அந்த பேட்டியில் அவர் கூறும்போது, இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறுவது மிகவும் நல்ல விஷயம் என்றும் ,மீண்டும் இந்தியாவில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். இந்த போட்டியில் நேர்மறையான  விஷயமாக ,எந்த ஒரு அணியும் அவர்களின் உள்ளுர் மைதானங்களில் விளையாடுவதில்லை. இந்த செயலானது வரவேற்கத்தக்கதாக உள்ளது என்றார். அதோடு கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டி ,மிகவும் போட்டி நிறைந்து காணப்பட்டதாகவும் , அந்தப் போட்டியில் அனைத்து அணிகளும் கடைசி மூன்று அல்லது நான்கு  போட்டிகள் வரை அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்ததாகவும், அவர் கூறினார். எனவே கடந்த ஆண்டை போன்றே இந்த தொடரும் சவால் நிறைந்ததாக காணப்படும் என்று அவர் கூறினார்.

Categories

Tech |