ரயில் மோதி ஒருவர் பலியான சம்பவம் லண்டனில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் நாட்டில் தெற்கு விம்பில்டன் பகுதியில் ரயில்வே தண்டவாளம் உள்ளது. அந்த தண்டவாளத்தில் சில தினங்களுக்கு முன்பு ஆண் நபர் ஒருவர் விழுந்து கிடந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் கிடந்த நபரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரிக்கையில் அவர் ரயில் மோதிதான் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.