Categories
தேசிய செய்திகள்

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு… வெளியான அறிவிப்பு..!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயம் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நுழைவு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்துக்கு பல்கலைக்கழக மாநில குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் பிஎஸ்சி படிப்புகளுக்கு திறனாய்வு சோதனை நடத்த பரிந்துரைத்துள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று அமல்படுத்தவும் முடிவெடுத்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை நுழைவுத்தேர்வு நடத்த வேண்டுமென பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் நுழைவு தேர்வு ஜூன் மாத இறுதிக்குள் நடத்தப்படும் எனவும், அதன் முடிவுகள் ஜூலை மாதத்தில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக பல்கலைக் கழக மாநில குழு தரப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டால் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து மட்டுமே கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்படும்.

Categories

Tech |