சுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்த தேர்தலில் பல கட்சிகள் தனித்து போட்டியிட்டது, சில கட்சிகள் கூட்டணியாக போட்டியிட்டது. இந்த தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியான பாமக தேர்தலை சந்தித்தது. தற்போது அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தற்போது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலை சீரழிக்கும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் ஒரு பகுதியினர் செய்யும் தொழிலை உருவாகும் கழிவுகளை மற்றவர்கள் மீது கொட்டுவது “சுற்றுச்சூழல் இனப்பாகுபாடு”. மீண்டும் பதவி ஏற்க இருக்கும் எடப்பாடி அரசிடம் வலியுறுத்தி கேட்டுக்கொள்வது பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லை என்ற நிலையை பாமக உருவாக்கும் கூறியுள்ளார்.