Categories
உலக செய்திகள்

டிரைவர் இல்லாமல் இயங்கும் தீயணைப்பு வாகனம்… புதிய அசத்தல் கண்டுபிடிப்பு…!!!

 துபாயில் மேம்படுத்தப்பட்ட மூன்று நாள் வாகன கண்காட்சியில் புதிதாக மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

துபாயில் கஷ்டம் சோ என்ற தலைப்பில் நவீன முறையில் மேம்படுத்தப்பட்ட மூன்று நாள் வாகன கண்காட்சி நேற்று தொடங்கி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. அந்த கண்காட்சியை தீயணைப்பு துறையின் பொது இயக்குநர் ராஷித் தானி அல் மத்ரூசி தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவரிடம் புதிதாக அறிமுகமான மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனத்தின் சாவியை ஒப்படைத்தனர். அப்போது அவர் அதனின் சிறப்பு தன்மையை கூறியுள்ளார்.

அதாவது அந்த மின்சார தீயணைப்பு வாகனம் ஆஸ்திரிய நாட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அந்த வாகனம் சாதாரண தீயணைப்பு வாகனத்தை விட 20 மடங்கு அதி வேகமாக செல்லக்கூடியது. அதுமட்டுமின்றி 40% கூடுதல் செயல்திறனை கொண்டது. இந்த தீயணைப்பு வாகனத்தின் உள்ளே ஓட்டுனர் அமரும் பகுதியில் 17 அங்குலம் அளவுள்ள எல். ஈ. டி. திரை அமைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள தொடுதிரை அமைப்பில் ஸ்மார்ட் முறையில் வாகனத்தை செயல்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.

இதேபோல இதனை தொலைதூரத்தில் இருந்தபடியே இயக்க முடியும். அதாவது ரெடிமேட் தொழில்நுட்பம் மூலம் இந்த வாகனத்தை ஓட்டுனர் இல்லாமலேயே தீயணைப்புத் துறையின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே தீயணைப்பு வேலையினை செய்யலாம். இந்த தீயணைப்பு வாகனத்தில் உள்ள டேங்கில் 4 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேகரித்து வைத்துக் கொள்ளலாம். இதில் 6 தீயணைப்பு ஊழியர்கள் பயணிக்கலாம். பின்பு மின்சார தீ  போன்றவற்றை கட்டுப்படுத்தும் நுரை திரவம் 400 லிட்டர் டேங்கில் அடைத்து வைத்துள்ளது.

இந்த வாகனத்திற்கு 40 நிமிடங்களில் 80% சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். அதேபோல இந்த வாகனத்தில் 8 மணி நேரம் தொடர்ந்து தீயணைப்பு பணியை மீட்புக்குழுவினர் செயல்படுத்தலாம். மேலும் 500 கிலோ மீட்டர் தொலைவு இடை நில்லாமல் இந்த வாகனம் பயணம் செய்யும். குறிப்பாக இந்த வாகனம் விற்பனைக்கு இல்லை என்றும் துபாய் தீயணைப்புத் துறைக்கு மட்டுமே பெறப்பட்டுள்ளது என குறிப்பிடத்தக்கது என்று தீயணைப்புத் துறையின் இயக்குனர் கூறியுள்ளார்.

Categories

Tech |