கொரோனா விதிகளை மீறுபவர்களிடம் நாள்தோறும் 10 லட்சம் வரை அபராதம் வசூலிக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு தொடர்பான ஆலோசனை நடத்தி வருகின்றது. மேலும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் வசூலிக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் தினசரி தலா ரூபாய் 1.50 லட்சம் அபராதம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. சென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூபாய் 200, எச்சில் துப்பினால் ரூபாய் 500 உள்ளிட்ட அபராதம் விதிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.