சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியது யாராக இருந்தாலும் தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் நாட்டு ஆயுதமேந்திய படைகளின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டுக்கு சொந்தமான Saviz என்ற சரக்கு கப்பல் இந்த வார தொடக்கத்தில் சிவப்புக் கடலில் பயணித்து கொண்டிருக்கும்போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் கப்பலுக்கு அடியில் பொருத்தப்பட்ட கன்னி வெடி அல்லது ஏவுகணை மூலம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து ஈரான் ஆயுதமேந்திய படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது “இந்த தாக்குதல் நடத்தியது யாராக இருந்தாலும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம். இந்தத் தாக்குதலை முதலில் யார் ஏற்படுத்தியது என்பதை தெளிவாக கண்டறியப்பட்ட பின்னரே பதிலடி கொடுக்கப்படும்” என அவர் கூறியுள்ளார்.