நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் வசூலிக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் தினசரி தலா ரூபாய் 1.50 லட்சம் அபராதம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. சென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூபாய் 200, எச்சில் துப்பினால் ரூபாய் 500 உள்ளிட்ட அபராதம் விதிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.