சீனாவில் உயிரியல் பூங்காவில் ஒருவருடைய நாய்க்குட்டி தவறுதலாக ஓநாய் கூண்டிற்குள் விழுந்துள்ள வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவிலுள்ள ஒரு உயிரியல் பூங்காவிற்கு ஒரு நபர் தன் செல்லப்பிராணியான நாய்க்குட்டியை தூக்கி சென்றுள்ளார். அப்போது ஓநாய்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தை அவர் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென்று எதிர்பாராத விதமாக அவர் வைத்திருந்த நாய்க்குட்டி கைதவறி ஓநாய்களின் கூண்டில் விழுந்துள்ளது.
இதனை பார்த்துக்கொண்டிருந்த அனைவருமே பதற்றத்தில் கூச்சலிட்டுள்ளனர். உடனே அந்த நாய் குட்டியை 7 ஓநாய்கள் வந்து சுற்றி வளைத்து கொண்டது. அதன் பிறகு இந்த நாய் குட்டிக்காக பல ஓநாய்கள் சேர்ந்து சண்டையிட்டுள்ளன. அதன் பிறகு எப்படியோ ஒரு ஓநாய் அதில் வெற்றி பெற்று அந்த நாய்க்குட்டியை பிடுங்கிக்கொண்டு ஓடுகிறது. இந்த பயங்கர காட்சி வீடியோவாக வெளியாகியுள்ளது.