நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் பேருந்துகளில் வெளி நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகம் பயணம் செய்யும் வழித்தடங்களில் காலை மற்றும் மாலை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.