Categories
உலக செய்திகள்

அம்மாடியோவ்! கழிவுநீர் செல்லும் துவாரத்தில்…. தெரிந்த 2 பளீச் கண்கள்…. காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் கணவன் மனைவி இருவர் வசித்து வந்த வீட்டில் குளியல் அறையில் திடீரென்று தண்ணீர் வெளியேராமல் இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் சிறிய அடைப்பு ஏதாவது இருக்கும் என்று கண்டுகொள்ளாமல் விட்டுள்ளன.ர் இதைத் தொடர்ந்து காலப்போக்கில் இதே பிரச்சினையாக இருந்ததால் பிளம்பரை வரச்சொல்லி பார்க்க சொல்லியுள்ளனர்.

அப்போது பிளம்பர் வந்து பார்த்துவிட்டு கழிவுநீர் செல்லும் துவாரத்தை திறந்து ப்பார்த்தபோது அங்கு இரண்டு கண்கள் பளிச்சென்று தெரிந்தததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அதன் துவாரத்தை திறந்து பார்க்கையில் அதற்குள் இரண்டு மீட்டர் நீளமுள்ள  மலைப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து அந்த பாம்பை லாவகமாக வெளியே எடுத்துள்ளனர். இந்த பாம்பு சாக்கடை நீர் செல்லும் குழாய் வழியாக வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |