பிரிட்டனில் கோடீஸ்வரரான சர் ரிச்சர்ட் லெக்சிக்டன் நேற்று இரவில் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் பெரிய பணக்காரர்களில் ஒருவரான சர் ரிச்சர்ட் லெக்சிக்டன்(83) மற்றும் அவரின் இரண்டாம் மனைவி Anne Schreiber(65) ஆகிய இருவரும் தென் மேற்கு இங்கிலாந்தில் உள்ள Dorest பகுதியில் இருக்கும் மாளிகையில் தங்கியிருந்த போது மர்ம நபர் ஒருவரால் நேற்று இரவில் கத்தியால் தாக்கப்பட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ரிச்சர்ட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவரின் மனைவி, மருத்துவமனை சிகிச்சையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். மேலும் இச்சம்பவம் நடந்து மூன்று மணி நேரங்களுக்கு பின்பு அவர்களின் குடியிருப்பில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் சந்தேகத்தின் அடிப்படையில் 34 வயது நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்த நபர் இந்த தம்பதிகளின் உறவினர் என்று தெரிய வந்தவுடன் விசாரணை நடத்திவிட்டு அவரை காவல்துறையினர் அனுப்பிவிட்டனர்.
மேலும் ரிச்சர்ட்டின் ஒட்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு சுமார் 540 மில்லியன் டாலர் ஆகும். மேலும் இவர் நல்ல மனிதர் என்ற பெயர் பெற்றவர். இவரது நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பெண் கூறியுள்ளதாவது, இது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை, இது முற்றிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.