Categories
விளையாட்டு

ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டியில்… முதல்முறையாக 4 இந்திய வீரர்கள்… தகுதி பெற்று சாதனை …!!!

இந்திய வரலாற்றிலேயே ,ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டிக்கு , 4 இந்திய வீரர்கள் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர் .

ஓமனில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ,ஆசிய மண்டல தகுதி சுற்றுக்கான பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆண்களுக்கான லேசர் ஸ்டாண்டர்டு பிரிவில் , இந்திய வீரரான விஷ்ணு சரவணன் ,2வது இடத்தைப் பிடித்து ,ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து  கே.சி.கணபதி-வருண் தாக்கர் ஜோடி,ஆண்களுக்கான 49 இஆர் கிளாஸ் பிரிவில் முதலிடத்தை பிடித்து, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர். இதற்கு முன்பு நேத்ரா குமணன் (23 வயது) லேசர் ரேடியல்  பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் .

அதோடு ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு, தகுதி பெற்ற  முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ,இந்தியா ஒரு பிரிவில் மட்டும் பங்கேற்று விளையாடியுள்ளது. ஆனால் தற்போது இந்தியா மூன்று பிரிவுகளைக் கொண்ட போட்டிக்கு  தகுதி பெற்றது ,இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமல்லாது இந்திய வரலாற்றிலேயே ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டிக்கு 4 இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது  இதுவே முதல் முறையாகும்  ஒலிம்பிக் பாய்மரப் படகு போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ள இந்திய வீரர்களுக்கு மத்திய விளையாட்டு மந்திரியான கிரண் ரிஜிஜு பாராட்டு தெரிவித்தார்.

Categories

Tech |