Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த இரண்டு தொகுதிகளில்… இங்க தான் அதிகமா பதிவாகியிருக்கு… வெளியிடப்பட்ட வாக்கு சதவீதம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலன்று மொத்தம் 79.04 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், பெரம்பலூர் என இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளுக்கு கடந்த 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் குன்னம் தொகுதியில் மொத்தம் 80.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல் பெரம்பலூர் தொகுதியில் மொத்தம் 78.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் குன்னம் தொகுதி, பெரம்பலூர் தொகுதியை விட அதிகம் ஓட்டுப்பதிவானது.

மொத்தம் 79.04 சதவீதம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஓட்டு பதிவானது. வாக்களிக்க தகுதி பெற்றிருந்த 22 திருநங்கை வாக்காளர்களில் பெரம்பலூர் தொகுதியில் ஒருவர் மட்டுமே ஓட்டு போட்டுள்ளார். குன்னம் தொகுதியில் 13 திருநங்கை வாக்காளர்களில் ஒருவர் கூட ஓட்டு போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |