நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் கொரோனா கட்டுப்பட்டு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமி கடந்த மாதம் 11ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதையடுத்து பேட்டியளித்த அவர், தமிழகத்தில் தினசரி 80 ஆயிரம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 34 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.