Categories
உலக செய்திகள்

காதல் வெறி.. 18 வயது பெண்ணை மணந்த 74 வயது அமைச்சர்.. 3 பேர் மட்டுமே பங்கேற்ற ரகசிய திருமணம்..!!

நைஜீரியாவில் 74 வயது அமைச்சர் 18 வயது இளம் பெண்ணை ரகசியமாக திருமணம் செய்துள்ளார். 

நைஜீரியாவில் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சராக இருப்பவர் அலாஜி முகமது சபோ நானானோ. 74 வயதுடைய இவர் கடந்த 3-ம் தேதியன்று 18 வயது இளம்பெண்ணான ரகியா என்பவரை ரகசியமாக திருமணம் செய்துள்ளார். மேலும் இவர்களது திருமணத்தில் மூன்று நபர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

அதாவது இவர்களுக்கு இடையில் 56 வயது வித்தியாசம் இருப்பதால் இவர்களது திருமணத்தை அமைச்சரின் குடும்பத்தினர் ஆதரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் ரகியா மீதுள்ள  அளவுகடந்த காதலினால் அவரை எவராலும் தடுக்க முடியாமல் போனதாம். அமைச்சர் கனோ நகரில் இருக்கும் அவரது வீட்டில் தற்போது தன் மனைவி ரகியாவை தங்க வைத்திருக்கிறார்.

Categories

Tech |