கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கனடாவின் வின்னிபெக்கை சேர்ந்த முகமது யூனிஸ் அலி(21) கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி தனது வீட்டின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் யூனிஸ்அலி சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்கள் கழித்து உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய இளம் பெண்ணின் சிசிடிவி புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
அந்தப் புகைப்படத்தில் அந்தப் பெண்ணின் கையில் பச்சை குத்தி இருக்கும் காட்சியும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து அந்தப் பெண்ணுக்கு தகவல் தெரியும் என காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும் அந்தப் பெண் பற்றியோ துப்பாக்கிச்சூடு பற்றியோ யாருக்காவது தகவல் தெரிந்தால் காவல்துறையினரிடம் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.