பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 2,330 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2,286 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேலும் 15 பேருக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது திருச்சி, பெரம்பலூர், சிதம்பரம், காஞ்சீபுரம், அரியலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும், தஞ்சை, பெரம்பலூர், சென்னை தனியார் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 21,808 பேருக்கு பொது சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.