அர்ச்சனா சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் அர்ச்சனா. இதையடுத்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் சில சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் .
மேலும் அர்ச்சனா முதல் முதலில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.