Categories
உலக செய்திகள்

வேலை இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன்…. 35 திர்ஹான் லட்சமாக மாறிய அதிஷ்டம்…. தந்தையின் உருக்கமான பேட்டி….!!

கிரெடிட் கார்டில் வைத்திருந்த 35 திர்ஹான் லாட்டரி டிக்கெட்டால் லட்சமாக மாறிய சம்பவம் குறித்து தந்தை ஒருவர் உருக்கமாக பேசியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் என்பவர் தற்போது துபாயில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் தனது வேலையை கடந்த ஜனவரி மாதம் விட்டுள்ளார். இவருக்கு தற்சமயம் வரை வேறு எந்த வேலையும் கிடைக்காததால் அவர் வறுமையில் வாடி வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய கிரெடிட் கார்டில் கடைசியாக 35 திர்ஹானை வைத்துள்ளார். அந்த பணத்தை வைத்து லாட்டரி டிக்கெட் வாங்கி வைத்துள்ளார்.

அதன்பின் நடந்த லாட்டரி டிக்கெட் குழுக்களில் வெற்றி பெற்று 142857 திர்ஹானை வென்றுள்ளார். இதுகுறித்து டென்னிஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது “நான் மிகவும் வறுமையில் வாடி கொண்டிருந்தேன். இந்த பணத்தை என்னுடைய வங்கி கணக்கில் பார்க்கும் போது எனக்கு கண்ணீர் தான் வந்தது. இந்த பணம் என்னுடைய வீட்டின் கடனை அடைக்க உதவும். மேலும் இதன் மூலம் நான் என் குடும்பத்தார் மற்றும் மகளுடன் நேரத்தை செலவிட முடியும்” என அவர் உருக்கமாக கூறியுள்ளார்.

Categories

Tech |