தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி 6 வாக்காளர்களுக்காக தேர்தல் அதிகாரிகள் சுமார் 160 கிலோமீட்டர் பயணித்து சென்றுள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும் பத்மநாதபுரம் தொகுதிக்குட்பட்ட மேல் கோதையாறிலிருக்கும் ஆறு வாக்காளர்காக அங்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அப்பகுதிக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சாலை வசதி கிடையாது. இதனால் மேல் கோதையாறு அணைக்கு திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் மாஞ்சோலை வழியாக தான் செல்ல வேண்டும்.
இதனையடுத்து பத்மநாதபுரம் தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மேல் கோதையாறு வாக்குச்சாவடிக்கு சுமார் 160 கிலோமீட்டர் பயணித்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு முடிந்ததும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு ஓட்டு எந்திரத்தை கொண்டு சேர்த்தனர்.