நெல்லையில் தற்போது 100°யை தாண்டி வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
தமிழகத்தில் தற்போது கோடை காலம் ஆரம்பித்திருக்கும் நிலையில் அனைத்துப் பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் தனிநபர்கள் ஆங்காங்கே குளிர்பான கடைகளை திறந்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது 100°யை தாண்டி வெயில் கொளுத்துகிறது.
இதனால் பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் மதிய வேளையில் சாலையில் பயணிக்கக்கூடிய வாகன ஓட்டிகள் மீது அனல் காற்று வீசுவதால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்கிடையே அனைவரும் உடல் உஷ்ணத்திலிருந்து காத்துக்கொள்ள சாலையோரமிருக்கும் குளிர்பான கடைகளை நாடுகின்றனர்.