2021 ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில், பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியானது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ,பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா – கிறிஸ் லின் ஜோடி விளையாடினர். ரோஹித் சர்மா 24 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அதன் பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினார். சூர்யகுமார் யாதவ் -கிறிஸ் லின் ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்பிறகு 31 ரன்களில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்க ,கிறிஸ் லின் 49 ரன்களை எடுத்து அரைசத வாய்ப்பை தவறிவிட்டார். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 13 ரன்கள் எடுத்தார். 16 ஓவரில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. 18-வது ஓவரில் விளையாடிய இஷான் கிஷன் 19 பந்துகளில், 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் 19வது ஓவரில் ஜேமிசன் 12 ரன்களை விட்டுக் கொடுத்தார். கடைசி ஓவரை ஆர்சிபி அணியின் ஹர்ஷல் பட்டேல் பந்துவீசினார். இறுதி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்துள்ளது. இதில் ஆர்சிபி அணியின் ஹர்ஷர் பட்டேல் சிறப்பாக பவுலிங் செய்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.