Categories
கிரிக்கெட் விளையாட்டு

மாஸ் காட்டிய ‘டி வில்லியர்ஸ்’… இறுதி கட்டத்தில் மும்பையை வீழ்த்தி … முதல் போட்டியில் ஆர்சிபி வெற்றி …!!!

ஆர்சிபி அணியில் டி வில்லியர்ஸ் காட்டிய அதிரடி ஆட்டத்தால் ,மும்பை அணியை வீழ்த்தி  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

2021  ஐபிஎல் சீசனின்  முதல் போட்டியானது, நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டனர். டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.இதனால் முதலில்  மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா -கிறிஸ் லின் இருவரும் களமிறங்கினர். ரோஹித் சர்மா 19 ரன்களில் அவுட் ஆனார். பிறகு சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 31 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கிறிஸ்டின் 49 ரன்களை  எடுத்து அரைசத வாய்ப்பை தவறவிட்டார்.இவர்  4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களை அடித்து விளாசினார்.

அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 13 ரன்கள் ,இஷான் கிஷன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆர்சிபி அணியில் பவுலிங் செய்த ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட்டுகளை எடுத்தார். மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. இதன் பின் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக விராட்கோலி வாஷிங்டன் சுந்தர் ஜோடி களமிறங்கினர். ஆனால் சுந்தர் 10 ரன்களில் ரன் அவுட்டானார். இதன் பிறகு களமிறங்கிய படிதார் 8 ரன்களில் ஆட்டமிழந்தார் . இதற்கு அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மேக்ஸ்வெல்- விராட் கோலி ஜோடி 52 ரன்களை எடுத்தது . இதன்பிறகு விராட் கோலி 33 ரன்களில் வெளியேறினார். இதை தொடர்ந்து மேக்ஸ் வெல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு களமிறங்கிய டி வில்லியர்ஸ் முதலில் நிதானமான ஆட்டத்தை காட்டினார். அதன் பிறகு அதிரடி ஆட்டத்தை காட்டி, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதிகட்டத்தில் ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்து,  வெற்றி பெற்றது. நடந்த முதல் போட்டியில்  ஆர்சிபி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றியை  கைப்பற்றியது.

Categories

Tech |