பிரபல கன்னட நடிகை தனது திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
பிரபல கன்னட நடிகை சைத்ரா கூட்டூர் தனது திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமான இவர், சமீபத்தில் நாகர்ஜுன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் திருமணம் தொடர்பான பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அவர் நீண்ட நாளாக மன உளைச்சலுக்கு ஆளானார். அதனை யாரிடமும் வெளியில் சொல்லாமல் தவிர்த்து வந்த அவர், பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.