Categories
லைப் ஸ்டைல்

குழந்தை வரத்தை கொடுக்கும் பூவரசம் பூ… பல நோய்களுக்கும் அருமருந்து…!!!

உடலில் உள்ள நோய்களுக்கும் கரு உருவாகவும் அருமருந்தாக அமையும் பூவரசம் பூ நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாகவும், பெண்களுக்கு கரு உருவாக உதவியாக இருக்கும் பூவரசம் பூ நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். அழகிய மஞ்சள் நிறத்திலான பூவரசம் பூவை அரைத்து சருமத்தில் பூசி வந்தால் தோல் வெடிப்பு நீங்கி உங்கள் சருமம் மிகவும் பளபளப்பாக மாறும். அந்த பூவோடு விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து, பித்த வெடிப்பு, ஆசனவாய் வெடிப்பு மற்றும் மூல நோய் ஆகியவற்றிற்கு வெளிப்புறமாக தடவி வந்தால் அந்த நோய் விரைவில் குணமடையும்.

பெரும்பாலும் கிராமப்புறங்களில் கர்ப்பிணிப் பெண்களை சரிப்படுத்தவும் கரு உற்பத்திக்கும் இந்த பூவை காலையில் வெறும் வயிற்றில் துவையலாக அரைத்து சாப்பிட்டு வருவார்கள். பூவரசம்பூ மற்றும் இலையை நன்றாக அரைத்து மோரில் கலந்து பெண்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் விரைவில் கரு உண்டாகும். அதற்கு காரணம் பூ மற்றும் இலையில் உள்ள ரசாயனப் பொருள்கள் கருப்பையை பலப்படுத்திய கருமுட்டை உற்பத்தியைத் தூண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கட்டாயம் குழந்தை வரம் கிடைக்கும். மேலும் உடலில் உள்ள பல நோய்களுக்கு இது அருமருந்தாக அமைகிறது.

Categories

Tech |