Categories
தேசிய செய்திகள்

மறு உத்தரவு வரும்வரை பள்ளிகளை மூட உத்தரவு… திடீர் அறிவிப்பு…!!!

டெல்லியில் மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளையும் மூட வேண்டும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதுமட்டுமன்றி கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குபொதுத் தேர்தல் நெருங்கிகொண்டு இருப்பதால் அவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. அதன்படி கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளையும் மறு உத்தரவு வரும் வரை மூட அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |