Categories
மாநில செய்திகள்

இன்று முதல் பேருந்துகளில் செல்வதற்கு கட்டுப்பாடு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இன்று முதல் பேருந்துகளில் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முக கவசம் அணிந்து பயணிகள் இருக்கையில் அமர்ந்து மட்டுமே பயணிக்க வேண்டும். முகக் கவசம் அணியாவிட்டால் பேருந்துகளில் பயணம் செய்ய முடியாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆட்டோக்களில் இரண்டு பேர், வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் மூன்று பேர் மட்டுமே பயணம் செய்யலாம். உணவகங்கள், தேனீர் கடைகளில் 50% இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Categories

Tech |