Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகள் நேரம் குறைப்பு?… அரசு தீவிர ஆலோசனை…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களின் நேரத்தை குறைக்க அரசு ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் நேரத்தை குறைப்பது பற்றி அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி உள்ளதை அடுத்து, டாஸ்மாக் கடைகளிலும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன. முக கவசம், கிருமி நாசினி தெளித்து மற்றும் தூய்மை படுத்துதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் வேலை நேரத்தை குறைக்கலாம் என அரசு பரிசீலனை செய்து வருகிறது.

Categories

Tech |