Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விஸ்வரூபம் எடுத்து வருகிறது… ஜனவரி 16-ல் தொடங்கி இதுவரை போடப்பட்டவை… அதிகாரி தகவல்..!!

கொரோனா தடுப்பூசி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இதுவரை 70 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள் என அனைத்திலும் தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த ஜனவரி 16-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதில் முதல்கட்டமாக காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள் உட்பட முன்கள ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனால் காவல்துறையினர், அரசு அலுவலர்கள் மட்டுமின்றி பொது மக்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் தரப்பில் 32,000 பேர், முன் களப்பணியாளர்கள் 28,000 பேர் என மொத்தம் 70 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதிலும் 97 சதவீதம் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். பொதுமக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த ஆர்வம் ஏற்பட்டதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பூசி மருந்து இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வரவழைக்கப்படுகிறது. அதன்படி தற்போது தடுப்பூசி மருந்து 12,000 ‘டோஸ்’ இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Categories

Tech |