அஜித் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ‘வலிமை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார்.
இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை வழங்கும் வகையில் வரும் மே 1 ஆம் தேதி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகிய இரண்டையும் படக்குழு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்செய்தி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.