Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த இரண்டு தொகுதிகளில்… மொத்தம் பதிவானவை… வெளியிடப்பட்ட வாக்கு சதவீதம்..!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் மொத்தம் 83.08 சதவீதமும், ஆத்தூர் தொகுதியில் மொத்தம் 77.96 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 9 லட்சத்து 62 ஆயிரத்து 488 பெண்கள், 9 லட்சத்து 14 ஆயிரத்து 386 ஆண்கள், 203 பேர் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 18 லட்சத்து 77 ஆயிரத்து 77 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் 7 லட்சத்து 30 ஆயிரத்து 379 பெண்கள், 7 லட்சத்து 10 ஆயிரத்து 13 ஆண்கள், 14 பேர் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14 லட்சத்து 40 ஆயிரத்து 406 பேர் வாக்களித்துள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிக வாக்குகள் பதிவு செய்துள்ளனர். மேலும் 4 லட்சத்து 33 ஆயிரத்து 671 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க வில்லை. மொத்த வாக்குப்பதிவில் 76.83 சதவீதம் ஆகும்.

இதில் ஆத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 143 பெண்கள், 1 லட்சத்து 40 ஆயிரத்து 273 ஆண்கள், 26 பேர் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 442 பேர் உள்ளனர். அதில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 389 பெண்கள், 1 லட்சத்து 10 ஆயிரத்து 819 ஆண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 209 பேர் வாக்களித்துள்ளனர். ஆத்தூர் தொகுதியில் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 77.96 சதவீதம் ஆகும். ஒட்டன்சத்திரம் தொகுதியில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 924 பெண்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 261 ஆண்கள், 31 பேர் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 216 பேர் உள்ளனர். அதில் 1 லட்சத்து 2,405 பெண்கள், 98 ஆயிரத்து 2 ஆண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 2 லட்சத்து 408 பேர் வாக்களித்துள்ளனர். ஒட்டன்சத்திரம் தொகுதியில் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 83.08 ஆகும்.

Categories

Tech |