துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையின் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதே போல் இச்சீரியலில் அகிலனுக்கு மனைவியாக நடித்து வரும் கண்மணிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் அவர் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளமான லைக்குகள் குவித்து வருகின்றனர்.