இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸில் வைபவ் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முன்னனி நடிகர்களான விஜய், அஜித்,சூர்யா போன்ற நடிகருடன் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது ஜெயம்ரவியுடன் நடித்துள்ள கோமாளி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது . இதைத்தொடர்ந்து தமிழகத்தின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸில் நடிக்கிறார்.
இதில் மங்காத்தா நடிகர் வைபவ் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் என்ற திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்த படம் எப்போது வெளியாகும் என காஜல் அகர்வால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.