உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பங்களாதேஸிசில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி முதல் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்படும் என்றும் நாட்டு பொது நிர்வாக துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.