Categories
உலக செய்திகள்

இறுதிவரை இளவரசர் பிலிப் ஏன் மன்னர் என்று அழைக்கப்படவில்லை..? பலருக்கும் தெரியாத உண்மை..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு இறுதி வரை மன்னர் பட்டம் வழங்கப்படாததற்கான காரணம் தெரியவந்துள்ளது. 

பிரிட்டன் மகாராணி என்று இரண்டாம் எலிசபெத் அழைக்கப்படுகிறார். எனினும் அவரது கணவரான பிலிப்பிற்கு இறுதிவரை மன்னர் பட்டம் வழங்கப்படவேயில்லை. இதற்கான காரணம் குறித்து பார்ப்போம். அதாவது மகாராணியார் இரண்டாம் எலிசபெத்திற்கு, இளவரசர் பிலிப்பை தான் 13 வயது சிறுமியாக இருக்கும்போதிலிருந்தே தெரியுமாம்.

இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டு, மகாராணியாரின் 21 வயதில் கடந்த 1942 ஆம் வருடத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. அன்றிலிருந்து தற்போது வரை இளவரசர் பிலிப் மன்னர் என்று அழைக்கப்படவேயில்லை. எதிர்காலத்தில் இளவரசர் வில்லியமிற்கு  மன்னர் பட்டம் வழங்கப்படும். அவருடைய மனைவி கேட் மிடில்டன் மகாராணி ஆவார்.

ஆனால் பிலிப் மட்டும் மன்னர் ஆகாததற்கு காரணம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள சட்ட திட்டங்கள் தானாம். அதாவது அரச குடும்பத்திற்கு வரப்போகும் மன்னரோ அல்லது ராணியோ ரத்த உறவின் மூலமாகத்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்களாம். பாலினம் மூலமாக இல்லையாம். அதன் படி, அரச குடும்பத்தினரின் வாழ்க்கைத் துணைகளை பொருத்தமட்டில் ஆண்களுக்கும்  பெண்களுக்கும் வெவ்வேறு விதிமுறைகளாம்.

அந்த வகையில், அரச குடும்பத்தின் ரத்த உறவில் இருக்கும் ஒரு ஆணை மணந்து கொள்ளும் பெண், கணவர் மன்னர் என்றால் மஹாராணி என்றும் இளவரசர் என்றால் இளவரசி என்றும் அழைக்கப்படுவர். ஆனால் அரச குடும்பத்தை சேர்ந்த பெண், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய அல்லது அரச குடும்பத்தை சேராத ஒருவரை திருமணம் செய்யும் பட்சத்தில் அவரின் கணவருக்கு இளவரசர் மற்றும் மன்னர் பட்டங்கள் வழங்கப்படாது.

இதனால்தான் கடந்த 1947 ஆம் வருடத்தில் எலிசபெத்தை, பிலிப் திருமணம் செய்தபோது அவருக்கு இளவரசர் பட்டம் அளிக்கப்படவில்லை. எனினும் கடந்த 1957 ஆம் வருடத்தில் தன் அதிகாரத்தை வைத்து மகாராணியார் தன் கணவருக்கு “இளவரசர்” பட்டத்தை வழங்கியுள்ளார். இதனால்தான் இறுதிவரை பிலிப் மன்னர் என்று அழைக்கப்படவில்லை.

மேலும் இளவரசர் பிலிப், கிரேக்க மற்றும் டேனிஷ் அரச குடும்பத்தின் இளவரசராக இருந்தவர். ஆனால் எலிசபெத்தை மணப்பதற்காக அவர் தன் அரச குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்டார். இதற்கு பரிசளிக்கும் விதமாக, மகாராணியார் பிலிப்பிற்கு எடின்பர்க் கோமகன் பட்டத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |