திண்டுக்கல்லில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 3/4 கோடி சட்டமன்றத் தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. இதனை முன்னிட்டு பறக்கும் படை மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 24 நிலையான கூர்ந்தாய்வுக்குழுக்கள், 32 பறக்கும் படைகள், 16 வீடியோக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுவினர் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்போது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்தனர். அதில் வியாபாரிகள் கொண்டு சென்ற பொருட்கள், ஏடி.எம்.எம் இயந்திரங்களில் நிரப்புவதற்கு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் ஆகியவை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தவகையில் ரூ. 1 கோடியே 85 லட்சத்து 42 ஆயிரத்து 400 கடந்த 6-ஆம் தேதி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரசீது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பணத்திற்கு உரிய ஆவணத்தை காண்பித்து அவற்றை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது.