Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தவிர்க்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்…!

புதிய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை எனில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இதில் தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் வருவாய் துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து கொரோனா பரவலை  கட்டுப்படுத்த சனிக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகள் பயனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒரு காலவரையறைக்கு  45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100 சதவீத தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 14 முதல் 16-ம் தேதி வரை அந்தந்த மாவட்டத்தில் தடுப்பூசி திருவிழா நடத்தப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழப்பு விகிதம் 1.41 சதவிகிதம் குறைவாக உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |