Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விடாமல் துரத்தி சென்று…. கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஊழியர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டதால் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள புழல் காவல்துறையினருக்கு விநாயகபுரம் செகரெட்ரியேட் காலனி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இறந்தவரின் சட்டைப்பையில் இருந்த செல்போனை எடுத்து சோதனை செய்தபோது, அவர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசித்துவந்த அன்பழகன் என்பதும், சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அன்பழகன் புழல் பகுதியில் இருக்கும் ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்தியுள்ளார்.

அப்போது அசோகா தெருவில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவரும், அவரது நண்பரும் அதே பாருக்கு மது அருந்த சென்றுள்ளனர். இந்நிலையில் அன்பழகனுக்கும், இரு நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தனது மோட்டார் சைக்கிளில் அன்பழகன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தபோது, கோபத்தில் அவரை கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது நண்பர் பின்தொடர்ந்து சென்று விநாயகபுரம் செகரெட்ரியேட் காலனி பகுதியில் அவரை சரமாரியாக அடித்து கொலை செய்தனர். இந்த அனைத்து காட்சிகளும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து தலைமறைவான அவரது நண்பரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |