இளவரசர் பிலிப் மறைவிற்கு இரண்டு குழந்தைகள் கொட்டும் பனியில் அஞ்சலி செலுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் நேற்று காலமானதை தொடர்ந்து மக்கள் இரவு முழுவதும் அரண்மனை வாயிலின் முன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொட்டும் பனியில் நள்ளிரவு ஒரு மணிக்கு தந்தை அலெக்ஸ் மற்றும் இரண்டு குழந்தைகள் அரண்மனை வாயிலின் முன் மலர் வைத்து இளவரசருக்கு அஞ்சலி செலுத்தினர். இது குறித்து குழந்தைகளின் தந்தை கூறுகையில் இது மிகவும் சோகமான செய்தி என்றும் இந்த செய்தியை கேட்டவுடன் மாலையில் வந்தோம் என்றும் ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் திரும்பி சென்றுவிட்டோம் எனவும் கூறினார்.
இதனை தொடர்ந்து குழந்தை Gabby இந்த செய்தி சோகமானது என்றும் இதனைக் கேட்டதும் எனக்கு அழுகை வந்தது எனவும் கூறினார். மேலும் நாங்கள் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்த அரண்மனை வாயிலுக்கு வர முடிவு செய்தோம் என்றும் ஆனால் எங்களால் கூட்டநெரிசலில் வர இயலவில்லை எனவும் கூறினார். குழந்தை Gabby இளவரசர் பிலிப்பை பற்றி வரலாற்றில் படித்துள்ளேன் என்றும் அது மிகவும் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் வரவழைத்தது எனவும் கூறினார்.