Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த சம்பவம்… அலறியடித்து எழுந்த பெண்கள்… போலீஸ் வலைவீச்சு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் இரவில் வீடு புகுந்து பெண்களிடம் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாடி நவீன் நகரில் நவாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடிட்டராக திண்டுக்கல்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 7-ஆம் தேதி வெளியே சென்று விட்டார். அன்று இரவில் நவாஸ் தாய் மும்தாஜ் பேகம், தந்தை அகமது பாட்சா, பாட்டி ஜான் பக்புல் பீவி ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவை உடைத்து மர்ம நபர்கள் இரண்டு பேர் நள்ளிரவில் வீட்டின் உள்ளே புகுந்தனர். அதன் பின்னர் அவர்கள் ஜான் பக்புல் பீவி, மும்தாஜ் பேகம் ஆகியோரின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகையை பறித்தனர்.

இதனால் 2 பேரும் திடுக்கிட்டு எழுந்து அலறினர். அவர்களின் சத்தத்தை கேட்டு எழுந்த அகமது பாட்சா அந்த மர்ம நபர்கள் இரண்டு பேரையும் துரத்தி பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வடமதுரை காவல் நிலையத்தில் நவாஸ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |