திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கட்டுப்பாட்டை இழந்த லாரி புளிய மரத்தின் மீது வேகமாக மோதியதில் டிரைவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.
திண்டுக்கல்லுக்கு பால் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேடசந்தூர் தாலுகா டி.கூடலூரில் இருந்து புறப்பட்டது. லாரியை கூடலூர் பகுதியில் வசித்து வரும் தங்கவேல் ஓட்டியுள்ளார். லாரி நேற்று முன்தினம் அதிகாலையில் வேடசந்தூரில் ஆத்துமேட்டு திண்டுக்கல் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையில் தாறுமாறாக ஓடியது.
அதன்பின் சாலையோரம் கடைகளுக்கு முன் இருந்த புளிய மரத்தின் மீது வேகமாக மோதியது. அதில் லாரியின் முன் பக்கம் சுக்குநூறாக நொறுங்கியது. அதில் படுகாயம் அடைந்த டிரைவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.