திருமணத்தைப் பற்றி பேசாதீர்கள் என்று பிரபல நடிகை சுனைனா பேட்டி அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுனைனா. இதை தொடர்ந்து நீர்ப்பறவை, மாசிலாமணி,வம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் பிரபல நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ட்ரிப் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதை தொடர்ந்து சுனைனா தற்போது தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “இந்த ஒன்றரை வருடத்தில் எனக்கு பல வகையான கதாபாத்திரங்களில் நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. குறிப்பாக சில இயக்குனர்கள் என்னை மனதில் வைத்துக் கொண்டு கதையை எழுதியுள்ளனர். அது எனக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது.
நான் திருமணம் செய்துகொள்ள போவதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் வதந்திகளே. தற்போது எனக்கு திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை. என் கவனம் முழுவதும் திரைவாழ்க்கையில் தான் இருக்கிறது. ஆகையால் இனி என் திருமணத்தை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, திரைப்படங்களைப் பற்றி பேசுங்கள்” என்று கூறியுள்ளார்.