Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை… வசமாக சிக்கிய கேரள வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ரயில் நிலைய பெண் அலுவலரிடம் நகையை பறிக்க முயன்ற வழக்கில் கேரள மாநிலத்தை சேர்ந்தவருக்கு 1 1/2 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எட்டிமடை ரயில்வே நிலையத்தில் அஞ்சனா என்ற பெண் அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அஞ்சனா ரயில் நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த பெரோஸ்கி என்பவர் அஞ்சனாவிடம் கத்தியை காட்டி நகையை பறிக்க முயற்சி செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த போத்தனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரோஸ்கியை கைது செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த கோவை 6 ஆம் எண் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1 1/2 வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |