மதுரையிலிருக்கும் அம்மன் கோவிலில் பொதுமக்கள் பிரம்மாண்டமாக தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார்கள்.
மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரத்தில் வீர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா மிகவும் கோலாகலமாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது. இதற்கிடையே 5 நாள் நடைபெற வேண்டிய இத்திருவிழாவை கொரோனா காலம் நடைபெறுவதால் 1 நாளில் வைக்கும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
அதன்படி 1 நாளன்று பலவிதமான நேர்த்திக் கடன்களை பொதுமக்கள் செலுத்தினர். அதாவது பெண்கள் முளைப்பாரி எடுத்தும், ஆண்கள் அலகு குத்தியும் ஊர்வலமாக வந்துள்ளர்கள். மேலும் சிலர் பறவைக்காவடி மூலம் அம்மனுக்கு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதனையடுத்து பலர் அக்னிச்சட்டி எடுத்தும் காளியம்மன் கோவில் சுற்றி வந்துள்ளார்கள்.