குக் வித் கோமாளி அஸ்வின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவில் நடித்துள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கும், கோமாளிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பலருக்கும் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் அஸ்வின் நடிப்பில் வெளியான ஆல்பம் பாடல் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவடைந்ததையடுத்து அஸ்வின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஜி திரை பிரீமியர் லீக் நிகழ்ச்சியின் புரோமோ விடியோவில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து இவர் ஜீ தமிழ் டிவியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.