கலிபோர்னியாவில் ஆதரவற்ற கடற்கரை மக்களுக்கு ஒருவர் விஷம் வைத்து உணவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா வடக்கு கலிபோர்னியாவில் சான்ஆன்ட்ரியாஸ் பகுதியில் வில்லியம் கேபிள்(38) என்பவர் வசித்து வருகிறார். அவர் கடந்த மே மாதம் ஹண்டிங்டன் கடற்கரையிலுள்ள ஆதரவற்ற மக்களுக்கு Oleoresin capsicum என்னும் காரமான மிளகாய் உணவை கொடுத்துள்ளார். இந்த மிளகாய் உணவு காவல்துறையினர் பயன்படுத்தும் பெப்பர்ப்ரையை விட இரு மடங்கு காரத்தை கொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வில்லியம் “காரமான உணவு சவாலில்” பங்கேற்பதற்காக மக்களுக்கு கொடுத்தார் என்றும் ஒரு சில மக்களுக்கு அது தெரியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வில்லியம் 8 பேருக்கு விஷம் கலந்த உணவு மற்றும் பீர் கொடுத்துள்ளார் என்றும் அதனை உண்ட பிறகு மக்களுக்கு வலிப்பு, சுவாசப் பிரச்சனை, வாந்தி, வயிற்று வலி ஆகிய நோய்கள் ஏற்பட்டதாகவும் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே வில்லியம்கேபிள் ஆதரவற்ற மக்களை சுயநலத்துக்காக பயன்படுத்தினார் என்ற குற்றத்திற்காகவும் விஷம் வைத்து கொல்ல முயற்சித்த குற்றத்திற்காகவும் அதனை வீடியோ பதிவு செய்ததற்காகவும் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். வில்லியம்கேபிளின் இந்த செயலுக்கு அவர் நிச்சயம் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற கருத்துகளும் பகிரப்பட்டு வந்தன. ஆனால் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.