Categories
அரசியல் மாநில செய்திகள்

தெம்பு இருந்தால்… திராணி இருந்தால்… துணிச்சல் இருந்தால்… தைரியம் இருந்தால்… நேருக்கு நேரா மோத தயாரா ? சவால் விடுத்த விக்ரமன்…!!

அறிவுபூர்வமாக என்னுடன் விவாதம் செய்ய தயாரா ? என இளம் பத்திரிகையாளர் விக்ரமன் சவால் விடுத்துள்ளார்.

அரக்கோணம் இரு இளைஞர்கள் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விக்ரமன்,  பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களையே எப்படி ஏமாற்றுகிறது ? என்பதற்கு பல சான்றுகள் சொல்லலாம். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்கள்…. 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து விட்டேன் என்று சொல்லி பெருமையாக பீற்றிக் கொண்டு இருந்தார்.

தேர்தல் முழுவதும் அதை தான் பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இந்த பத்தரை சதவீதம் என்பது எப்படிப்பட்ட ஒரு சூழ்ச்சி என்பதை வன்னிய சமுதாய இளைஞர்கள் தெரிந்தது என்றால், முதல் வேலையாக பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகங்களை  தான் சூறை ஆடுவார்கள்.

அந்த அளவுக்கு ஒரு மோசடியான செயலை செய்திருக்கிறார். அந்த மக்களை வஞ்சித்து இருக்கிறார். அப்படியே கொண்டு போய் இரண்டு திராவிட கட்சிகளிடமும் அடமான வைக்கக்கூடிய ஒரு செயலை தான் ஒவ்வொரு தேர்தலிலும் செய்து கொண்டு இருக்கிறார்.

ஏனென்றால் 16% அவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் அவர்கள் உள்ளே போகக் கூடிய நிலைமை இருந்ததை மாற்றி, வெறும் 10.5 சதவீதமாக… 6 சதவீதத்தை குறைத்து. அவர்களுடைய உரிமையை பிடிங்கி  விட்டார்கள் ராமதாஸ் அவர்கள், இதைத்தான் அவர் செய்து இருக்கிறார்.

சாதாரண மக்கள்…. சாதாரண ஏழை எளிய மக்களை வீடுபுகுந்து சூறை  ஆடுகிறீர்களே… நான் அந்த கட்சி உடைய நிறுவனருக்கும், அவருடைய மகனுக்கும் கேட்கிறேன்…. திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும், திரு.ராமதாஸ் அவர்களுக்கும் உங்களில் யாருக்காவது…. உங்கள் கட்சிக்கோ…. அல்லது உங்கள் கூட்டணியில் இருக்கக்கூடிய அந்த சனாதன பாஜக கட்சிக்கோ….

யாருக்காவது தெம்பு இருந்தால்… திராணி இருந்தால், துணிச்சல் இருந்தால், தைரியம் இருந்தால், நேருக்கு நேரா அறிவுப்பூர்வமாக சண்டையிட தயாரா நீ…. நான் கேட்கிறேன் நான் ஒற்றை ஆளாக வாரேன்… வணிகர் இட ஒதுக்கீட்டில்  நீ எப்படி உன்னுடைய மக்களை வஞ்சித்தஎன்பதை  விவாதிப்போம் ? கூட்டணி என்கின்ற பெயரில் நீ என்ன என்ன பேரம் பேசினாய் என்பதை விவாதிப்போமா ? என சவால் விடுத்தார்.

Categories

Tech |