தங்கள் வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்குமாறு பொதுமக்களிடம் சீமான் தெரிவித்துள்ளார்.
தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. அதனால் மனிதர்கள் மட்டுமல்லாமல் பிற உயிரினங்களும் தண்ணீருக்காக அவதிப்படுவது வழக்கமாகிவிட்டது. மனிதர்களாகிய நாம்தான் மற்ற உயிரினங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் வெயில் தாங்க முடியாமல் பல பறவைகள் உயிரிழப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அதனால் நாம் அனைவரும் வெயில் காலத்தில் பறவைகள் தண்ணீர் வைப்பது மிகவும் அவசியம்.
அதன்படி கோடை காலம் தொடங்கி விட்டதால் அனைவரும் தங்கள் வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்குமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது போல பிற உயிரினங்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். அதனால் பறவைகளுக்கும் பிற உயிர்களுக்கும் தண்ணீர் தொட்டி அமைத்து உயிர்நேயம் காக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.