இளவரசர் பிலிப் மரண செய்தியை வைத்து பிரபல ஊடகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்தியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பிரிதானியா இளவரசர் பிலிப் நேற்று உயிரிழந்துள்ளார். இந்த செய்தி பிரித்தானியாவே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதனால் பிரித்தானியாவில் 8 நாட்கள் துக்க நாட்களாக அனுசரிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இளவரசர் பிலிப் மரண செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே ஆங்கில ஊடகம் ஒன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அது என்னவென்றால் அந்த ஊடகம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் “மிகப்பெரிய பிரேக்கிங் செய்திக்காக எங்களுடைய சேனலுக்கு செல்லுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தது. இந்த ஊடகத்தை ட்விட்டர் பக்கத்தில் 8.6 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். இதனை கண்ட உடனேயே இணையதளவாசிகள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.